சிம்பிளாக நடந்து முடிந்த பிக்பாஸ் பிரதீப் திருமணம்.! பொண்ணு யார் தெரியுமா?? வைரலாகும் புகைப்படம்.!
பாவம் பாக்கிஸ்தான்.. பதுங்கி பாய்ந்த இங்கிலாந்து அணி திகில் வெற்றி!
பாக்கிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் நான்காவது நாளில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்தின் மான்செஸ்டரில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பாக்கிஸ்தான் அணி 326 ரன்கள் எடுத்தது. அந்த இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 219 ரன்கள் மட்டுமே எடுத்து 107 ரன்கள் பின்தங்கி இருந்தது.
ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியின் வேகத்தை ஈடுகொடுக்க முடியாத பாக்கிஸ்தான் வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அந்த அணி 169 ரன்கள் மட்டுமே எடுத்து 277 ரன்கள் இலக்கை இங்கிலாந்து அணிக்கு நிர்ணயித்தது.
பின்னர் இரண்டாவது இன்னிங்சை துவங்கிய இங்கிலாந்து அணியும் முதல் இன்னிங்ஸை போலவே ஆரம்பத்தில் விக்கெட்டினை இழந்து தவித்தது. அந்த அணி ஒரு கட்டத்தில் 117 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது.
ஆனால் ஆறாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த பட்லர் மற்றும் வோக்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அவர்கள் இருவரும் ஆறாவது விக்கெட்டிற்கு 139 ரன்கள் எடுத்தனர். பட்லர் 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த பிராட் 7 ரன்னில் ஆட்டமிழந்தாலும் மறுமுனையில் நங்கூரமாக நின்ற வோக்ஸ் 84 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். 7 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்கள் எடுத்த இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வோக்ஸ் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.