குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
ஏபிடி வில்லியர்ஸின் அழகான மனைவி மற்றும் குழந்தையின் புகைப்படத்தை பார்த்திருக்கிறீர்களா!
தென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை வரை விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தென்ஆப்பிரிக்கா மண்ணில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை தென்ஆப்பிரிக்கா கைப்பற்றிய பிறகு திடீரென கடந்த 2018 ஆண்டு மே மாதம் தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.
அவர் பணத்திற்கு ஆசைப்பட்டு ஐபிஎல் போன்ற வெளிநாட்டு தொடர்களில் விளையாடுவதற்காகவே தென்னாபிரிக்க அணியில் இருந்து ஓய்வை அறிவித்து விட்டார் என அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுப்பப்பட்டன. ஆனால் உண்மை அதுவல்ல எனவும் ஓய்விற்கான காரணத்தையும் டிவில்லியர்ஸ் அப்போதே வெளியிட்டார்.
தனது குடும்பத்திற்காக தான் தான் ஓய்வு பெறுவதாக டிவில்லியர்ஸ் அப்போதே தெரிவித்தார். டிவில்லியர்ஸ்க்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது.
தற்போது உலக கோப்பையின் போது தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்துள்ள டிவில்லியர்ஸ், தென் ஆப்பிரிக்க அணியில் ஆடிய பொழுது என் குடும்பத்தினருடன் வெறும் மூன்று மாதங்களே செலவிட முடிந்தது. ஆனால் தற்பொழுது அவர்களுடன் அவர்களுடன் என்னால் எட்டு மாதங்கள் உடன் இருக்க முடிகிறது என தெரிவித்துள்ளார்.