96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
அதிக கோப்பைகளை பெற்றுக்கொடுத்து புதிய சாதனை படைத்த மெஸ்ஸி!.
ஸ்பெயினின் கிளப் கால்பந்து அணியான பார்சிலோனாவிற்கு, அதிக கோப்பைகளை வென்று கொடுத்தவர்களின் பட்டியலில் லயோனல் மெஸ்சி முதலிடத்தில் உள்ளார்.
அர்ஜெண்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி, ஸ்பெயினின் கிளப் அணியான பார்சிலோனாவிற்கு விளையாடி வருகிறார். கால்பந்தாட்டத்தில் உலக அளவில் மெஸ்சிக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற சூப்பர் கோபா இறுதிப் போட்டியில் பார்சிலோனா அணி 2-1 என செவியா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இதன்மூலம், பார்சிலோனா அணிக்கு அதிக கோப்பைகளை வாங்கிக் கொடுத்த வீரர் என்ற பெருமையை மெஸ்சி பெற்றுள்ளார். இதுவரை அவர் 33 முறை சாம்பியன் பட்டத்தை பார்சிலோனாவிற்கு வென்று கொடுத்துள்ளார்.
இதற்கு முன்பு இனியஸ்டா 32 முறையும், ஜெர்ராடு பிக்காய் 28 முறையும், பஸ்குயட்ஸ் 28 முறையும், சேவி 25 முறையும் சாம்பியன் பட்டங்களையும் வென்று கொடுத்துள்ளனர்.