இப்படி ஒரு சொதப்பல் எங்கேயும் நடந்திருக்காது..! கடைசி பந்தில் 5 ரன் தேவை... பீல்டர் செய்த சம்பவத்தால் நிகழ்ந்த காமெடி சம்பவம்.! கதறி துடித்த வீரர்கள்.!



fun in cricket match

கிரிக்கெட் போட்டிகளுக்கு நடுவே சில வேடிக்கையான சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். ஆனால் பாகிஸ்தான் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற நிகழ்வு உச்சகட்ட காமெடியை உருவாக்கியுள்ளது. அதாவது பாகிஸ்தான் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் Al-Wakeel Cricket League என்ற பெயரில் 20 ஓவர் லீக் போட்டித் தொடர் ஒன்று நடைபெற்று வருகிறது. 

இதில், Audionic மற்றும் AutoMall ஆகிய இரு அணிகளும் மோதியது. இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த Audionic அணி 154 ரன்கள் எடுத்து. இதனையடுத்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது AutoMall அணி. சிறப்பாக ஆடிய இந்த அணிக்கு கைவசம் 2 விக்கெட்டுகள் இருந்த நிலையில் கடைசி பந்தில் 5 ரன்கள் வெற்றி என்ற சூழ்நிலை இருந்தது.

கடைசி பந்தில் சிக்ஸ் அடித்தால் வெற்றி, பவுண்டரி அடித்தால் டிரா என்ற நிலையில் கடைசி பந்தினை மிகவும் சிறப்பாக வீசினார் பந்து வீச்சாளர். அந்த பந்தினை எதிர்கொண்ட பேட்ஸ்மேனால் சிக்ஸரும் அடிக்கமுடியவில்லை, பவுண்டரியும் அடிக்கமுடியவில்லை. ஆனால் பீல்டர் செய்த சொதப்பலால் அந்த அணி எளிதாக வெற்றிபெற்றது. 

அதாவது கடைசி பாலில் பேட்ஸ்மேன் அடித்த பந்தினை தடுத்து எறியாமல் நேராக ஸ்டம்பை நோக்கி வேகமாக ஓடி வந்தார். தொடர்ந்து, பவுலிங் சைடு ஸ்டம்பிலும் அடித்தார். அப்போது பேட்ஸ்மேன் கிரீஸுக்குள் தான் இருந்தார். ஆனால், அந்த ஃபீல்டர் ஸ்டம்பில் அடித்ததும் பேட்ஸ்மேன்களும் ரன் ஓட ஆரம்பித்தனர். அந்த சமயத்திலும் பந்தினை கீப்பர் கைக்கு வீசாத அதே வீரர் பந்துடன் ஸ்டம்பை நோக்கி ஓடினார். பிறகு, அருகே சென்றதும் ஸ்டம்பில் பந்தினை அடிக்காமல் ரன் அவுட் செய்வதற்கு வேண்டி வேகமாக வீச அது ஸ்டம்பில் படாமல் கீப்பரையும் தாண்டி சென்றது. பீல்டர் செய்த தவறால் பேட்ஸ்மேன்கள் தேவையான ரன்களை ஓடியே எடுத்து எளிதில் வெற்றிபெற்றனர்.