ஆத்தாடி ஆத்தே..... கோல்கீப்பர் மின்னல் வேகத்தில் அடித்த ஒரே உதை.! தாறுமாறு சம்பவம்.! திகைத்துபோன மைதானம்.!



goal keeper kick

இத்தாலியில் மொடேனா - இமோலிஸ் அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. அந்த ஆட்டத்தில் 90 நிமிடங்கள் வரை இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்திருந்ததால் ஆட்டம் சம நிலையில் இருந்தது. இதனையடுத்து வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் மொடேனா அணியின் கோல்கீப்பர் அசத்தல் கோல் ஒன்றை அடித்து சக வீரர்களையும், ரசிகர்களையும் வியக்கவைத்தார்.

மொடேனா அணியின் கோல்கீப்பர் ரிக்கார்டோ கேக்னோ, தனது 18 அடி பாக்ஸிற்கு சற்று வெளியே இருந்து பந்தை உதைத்துள்ளார். அந்த பந்து அனைத்து வீரர்களை எல்லாம் தாண்டி சென்று எதிரணி கோல் கீப்பரின் முன் விழுந்தது. அப்போது எதிரணி கோல் கீப்பர் சுதாரிப்பதற்குள் பந்து மேலே எழுந்து வலைக்குள் சென்று கோலாக மாறியது. ரிக்கார்டோ அடித்த கோலின் மூலம் மொடேனா அணி 2-1 என்ற கோல் கணக்கில் இமோலிஸ் அணியை வீழ்த்தியது.


மொடேனா அணியின் கோல்கீப்பர் ரிக்கார்டோ கேக்னோ அடித்த அசத்தலான கோலை கண்டு வீரர்கள் உட்பட மைதானத்தில் இருந்த பார்வையாளர்கள் அனைவரும் உறைந்து போயினர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.