96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
ஐசிசி டெஸ்ட் தரவரிசை; முன்னேற்றமடைந்த இந்திய வீரர்கள்..!!
டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இதில் சிறந்த பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மீண்டும் நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டெஸ்ட் போட்டியில் சிறந்து விளங்கும் பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 932 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.
இந்திய அணியின் மற்றொரு பேட்ஸ்மேனான புஜாரா 765 புள்ளிகள் பெற்று ஆறாவது இடத்தில் நீடிக்கிறார். இவர்கள் இருவரை தவிர இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் யாரும் டாப்-10 ல் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அஜிங்க்ய ரஹானே 4 இடங்கள் முன்னேறி 18 வது இடத்தில் உள்ளார். அதனைத் தொடர்ந்து மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இளம் வீரர் ப்ரீத்வி ஷா 13 இடங்கள் முன்னேறி 60 வது இடத்தையும் ரிஷபான்ட் 23 இடங்கள் முன்னேறி 62 இடத்தையும் பிடித்துள்ளனர்.
தொடர்ந்து, டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப்பட்டியலில், ரவிந்திர ஜடேஜா (812) புள்ளிகள் பெற்று நான்காவது இடத்தையும், அஷ்வின் (777) புள்ளிகள் பெற்று எட்டாவது இடத்தையும் பிடித்துள்ளனர். வேக பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ், 4 இடங்கள் தாவி 25வது இடத்தை பிடித்துள்ளார் .
ஆல் ரவுண்டர்களுக்கான பட்டியலில் வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹாசன் (420) நம்பர்-1 இடத்திலும், இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜா (400) 2 வது இடத்திலும் அஷ்வின் (341) ஐந்தாவது இடத்திலும் உள்ளார்கள்.