நடிகர் விஷாலுக்கு என்னதான் ஆச்சு? வெளியானது மருத்துவ அறிக்கை.! விபரம் உள்ளே.!
தொடர் வெற்றி.. பாகிஸ்தானின் சாதனையை முறியடித்து இந்திய அணி புதிய உலக சாதனை!
மேற்கு இந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்று கைப்பற்றியது.
நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய இந்திய அணி கடைசி வரை போராடி இரண்டு பந்துகள் மீதமுள்ள நிலையில் 312 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
மேலும் ஏற்கனவே முதல் போட்டியை வென்ற இந்திய அணி இந்தத் தொடரை கைப்பற்றியது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தொடர்ந்து 12 ஆவது ஒருநாள் தொடரை இந்திய அணி வென்றுள்ளது. இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக தொடர்ச்சியாக அதிக ஒருநாள் போட்டி தொடர்களை வென்ற அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது.
இதற்கு முன்னதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியானது ஜிம்பாப்வே அணிக்கு எதிராக தொடர்ச்சியாக 11 ஒருநாள் தொடர்களை வென்றிருந்ததே சாதனையாக இருந்து வந்தது. தற்போது பாகிஸ்தானின் இந்த சாதனையை இந்தியா முறியடித்துள்ளது.