மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விக்கெட்டுகள் சரிந்து மந்தமான ஆட்டம்; இந்திய அணி வெற்றி பெறுமா?
இந்திய அணி தொடக்கத்திலேயே தனது முக்கிய விக்கெட்டுகளை இழந்து மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தி கொண்டிருப்பதால் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
ஆஸ்திரேலியா அணி வீரர்கள் ஆரம்பம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறினர். முதல் 10 ஓவரிலேயே பின்ச்(14) மற்றும் கேரி(5) புவனேஷ்வர் பந்தில் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த கவாஜா, மார்ஷ் சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடினர். ஆனால் அவர்களால் சாகலின் சுழலை சமாளிக்க முடியாமல் அவுட்டாகினர்.
அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரியத் தொடங்கின. ஹ்ன்ஸ்கோம்ப் மட்டும் 58 ரன்கள் எடுத்தார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 48.4 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 230 ரன்கள் மட்டும் எடுத்துள்ளது.
இந்திய அணி சார்பில் சுழலில் மிரட்டிய சாகல் 6 விக்கெட்டுகளையும் புவனேஷ்வர் மற்றும் சமி தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இந்த எளிதான இலக்கை எட்ட களமிறங்கிய இந்திய அணியின் துவக்க மட்டையாளர்கள் ஆன ரோகித் சர்மாவும் ஷிகர் தவானும் நிதானமான ஆட்டத்தை தொடங்கினர். ஆனாலும்
ரோகித் சர்மா 9 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அந்நிலையில் அணியின் எண்ணிக்கை 6 ஓவர்களுக்கு 15 ரன்கள் என்ற நிலையில் இருந்தது.
அதன்பிறகு களமிறங்கிய கேப்டன் விராட் கோலியும் தவானும் நிலைத்து நின்று ஆட முயன்றனர் ஆனால் தவான் 23 (46 ) ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். சிறப்பாக ஆடிய கோஹ்லி அரை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 46 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார்.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய கேதர் ஜாதவும் தோனியும் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். முடிவில் இந்திய அணி 142/3 (36.3 Ovs) ரன்களுடன் ஆடிக் கொண்டிருக்கிறது.