நடிகர் விஷாலுக்கு என்னதான் ஆச்சு? வெளியானது மருத்துவ அறிக்கை.! விபரம் உள்ளே.!
வெறித்தனமாக ஆடிய இந்திய வீரர்கள்! வெஸ்டிண்டிஸ் அணிக்கு இமாலய இலக்கு!
இந்தியா - வெஸ்டின்ட்டிஸ் அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்றுவருகிறது. முதலில் டாஸ் வென்ற வெஸ்டின்ட்டிஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது.
ஆரம்பம் முதலே வெஸ்டின்ட்டிஸ் வீரர்களின் பந்து வீச்சை இந்திய வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் KL ராகுல் பிரித்து மேய்ந்தனர். ரோகித் சர்மா 153 ரன்கள், KL ராகுல் 102 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தனர். இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி ரன் ஏதும் எடுக்காமல் முதல் பந்திலையே ஆட்டம் இழந்தார்.
இதனை அடுத்து அதிரடியாக விளையாடிய பண்ட் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் இருவரும் அணியின் எண்ணிக்கையை மேலும் உயர்த்தினர். மிக அதிரடியாக விளையாடிய பந்து பண்ட் 39 ரன்களில் ஆட்டம் இழக்க, தொடர்ந்து விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் 53 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் ஆட்டம் இழந்தார்.
இந்திய அணி வீரர்களின் அசுர ஆட்டத்தில் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 387 ரன்கள் எடுத்துள்ளது. 388 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் வெஸ்டின்ட்டிஸ் அணி பேட்டிங் செய்ய தயாராகிவருகிறது.