குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
20 ஓவர் போட்டியில எங்கள யாரும் அசைச்சுக்க முடியாது.! கெத்து காட்டிய இந்திய அணி.!
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி முதலில் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடியது. ஒருநாள் தொடரில் 2:1 என்று கணக்கில் ஆஸ்திரேலிய அணி தொடரை கைப்பற்றியது. இந்தநிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான முதலாவது 20 ஓவர் போட்டி கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி இந்திய அணி பேட்டிங் செய்தது.
இந்திய அணியின் துவக்க வீரர் ஷிகர் தவான் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய விராட் கோலியும் 9 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இந்திய அணியில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 51 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ரவீந்திர ஜடேஜா 23 பந்துகளில் 44 ரன்கள் அடித்தார்.
இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 161- ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர்கள் இருவரும் ஆரம்பத்திலே அதிரடி காட்டினர்.
இதனையடுத்து முதல் விக்கெட்டை தமிழகத்தை சேர்ந்த நடராஜன் வீழ்த்தினார். இதனையடுத்து அடுத்தடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 150 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.