நடிகர் விஷாலுக்கு என்னதான் ஆச்சு? வெளியானது மருத்துவ அறிக்கை.! விபரம் உள்ளே.!
வெஸ்டிண்டிசை கிழித்து தொங்கவிட்ட இந்திய அணி! ஆரம்பமே அசத்தல் வெற்றி!
வெஸ்டிண்டிஸ் அணியுடன் T20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட இந்திய அணி அந்த நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. விராட்கோலி தலைமையிலான இந்திய அணி வெஸ்டிண்டிஸ் அணியுடன் இன்று முதல் T20 போட்டியில் விளையாடியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது.
மிக சிறப்பாக பந்து வீசிய இந்தி அணி பந்து வீச்சாளர்கள் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை கைப்பற்றி 95 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். இதில் இந்திய அணி வீரர் சைனி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். வெஸ்டிண்டிஸ் அணி வீரர் பொல்லார்ட் அதிகபட்சமாக 49 ரன்கள் எடுத்தார்.
இதனை அடுத்து 96 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். அணியின் கேப்டன் விராட்கோலி 29 பந்துகளில் 19 ரன்கள், ரோகித்சர்மா 25 பந்துகளில் 24 ரன்கள் என்ற நிலையில் ஆட்டம் இழந்தனர்.
இறுதியில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 17 வது ஓவர் 2 வது பந்தில் 98 ரன்கள் அடித்து வெற்றிபெற்றுள்ளது. உலகக்கோப்பை தோல்விக்கு பிறகு இந்திய அணி பெரும் முதல் வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.