உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறும் நேரத்தில் திடீரென ஓய்வை அறிவித்த பிரபல இந்திய வீரர்!



indian-cricket-team-famous-palayer-retirement


இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான யுவராஜ் சிங் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இன்று மாலை ஓய்வு அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அணியின் சிறந்த ஆல் ரவுண்டர், அதிரடி ஆட்டக்காரர் யார் என்றல் அனைவரும் யுவராஜ் சிங்கை தான் கூறுவார்கள். அந்த அளவிற்கு இந்திய அணியில் இவர் மிக முக்கியமான வீரராக இருந்தார். 

2000-ம் ஆண்டில் இந்திய அணியில் ஒருநாள் போட்டிக்காக அறிமுகமானவர் யுவ்ராஜ் சிங். அதிரடி பேட்டிங்க்கு பெயர் போன இவர், ஒரே ஓவரில் 6 பந்துகளுக்கு 6 சிக்சர்கள் அடித்து உலகத்தையே திரும்பி பார்க்கவைத்தார். பல போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாகவும் யுவராஜ் இருந்துள்ளார். 2011 உலகக்கோப்பையில் சிறப்பான பங்களிப்பை அளித்து தொடர் நாயகன் விருதை யுவராஜ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

uvaraj sing

2018ல் யுவராஜ் அளித்த பேட்டியில், தனக்கு வயது அதிகரித்துக்கொண்டே போகிறது. எனவே முன்பை போல கிரிக்கெட் போட்டியில் நான் விளையாடுவேன் என்று தெரியவில்லை. 2019க்கு பின் ஓய்வு குறித்து அறிவித்துவிடுவேன் என கூறியிருந்தார்.

அதேபோல் யுவராஜ் சிங் தற்போது சர்வதேச போட்டிகளில் இருந்து  ஓய்வு எடுக்க முடிவெடுத்து,  சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். சர்வதேச போட்டிகளில் இருந்து ஒய்வு பெறும் அவர் ஐபிஎல் போட்டிகளில் சில ஆண்டுகள் தொடர்ந்து விளையாடலாம் என கூறப்படுகிறது.