தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
கெத்து காட்டிய இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜ்.! தட்டி தூக்கிய இங்கிலாந்து அணி.!
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் ஆடிய டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இதனையடுத்து இந்தியா மற்றும் இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடத்தப்படுகிறது. இதன் முதலாவது ஆட்டம் நேற்று நடைபெற்றது.
அந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஹீதர் நைட் முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தார். இதனையடுத்து இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களான மந்தனா 10 ரன்களிலும், ஷெபாலி 15 ரன்களிலும் அவுட் ஆகி வெளியேறினர். இதனையடுத்து களமிறங்கிய பூனம் ஓரளவிற்கு நிதானமாக ஆடி 32 ரன்கள் எடுத்தநிலையில் அவுட் ஆகினார்.
அடுத்ததாக களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் அதிரடியாக அடித்து ஆடினார். சிறப்பாக ஆடிய மிதாலி ராஜ் 72 ரன்கள் எடுத்த நிலையில் போல்டானார். இதனையடுத்து களமிறங்கிய பலரும் சொற்ப ரங்களில் ஆட்டமிழந்தனர். இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து இங்கிலாந்து அணி 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர் லாரன் 16 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். மற்றொரு துவக்க வீராங்கனை டேமி பியூமண்ட் சிறப்பாக ஆடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 87 ரன்கள் எடுத்திருந்தார். இங்கிலாந்து அணி 34.5 ஓவரில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்து, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.