குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
கொரோனா வைரஸின் தாக்கத்தால் ஐபிஎல் தொடரை வித்தியாசமாக நடத்த முடிவெடுத்த பிசிசிஐ! வெளியான புதிய தகவல்.
சீனாவில் தொடங்கி இன்று உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்நோயால் இதுவரை 4000க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது இந்தியாவிலும் இந்நோய் பரவலாக பரவி வருகிறது. இந்நோயை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் ஒரே இடத்தில் அதிகப்படியான மக்கள் கூட வேண்டாம் எனவும் அரசு வலியுறுத்தி வருகிறது.
இதனால் தற்போது உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஐபிஎல் போட்டிகளுக்கு கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 2 மாதங்கள் வரை நடைபெறும் போட்டி என்பதாலும், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வீரர்கள் கலந்து கொள்வதாலும் இந்த போட்டியை தள்ளி வைக்குமாறு கோரிக்கைகள் எழுந்துள்ளன.
ஆனால் இந்த போட்டியை நிறுத்தினால் 2000 கோடி வரை நஷ்டம் ஏற்ப்படக்கூடும் என்பதால் குறித்த தேதியில் விளையாட்டை நடத்த பிசிசிஐ முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் படி மூடிய மைதானத்திற்குள் ஐபிஎல் போட்டியை நடத்திட பிசிசிஐ திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
மேலும் இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், ஐபிஎல் போட்டிகளை நாங்கள் திட்டமிட்டபடி ரசிகர்கள் இல்லாமல் நடத்த இருக்கிறோம் என தெரிவித்து உள்ளார். இதனால் ரசிகர்கள் இந்த வருடம் ஐபிஎல் போட்டிகளை டிவியில் பார்த்து ரசிக்கக்கூடிய சூழ்நிலை உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் குறித்த இறுதி முடிவினை நாளை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.