தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
ராஜஸ்தானுக்கு மட்டும் ஏன் இப்படி ஸ்டெம்பில் பெவிகால் ஒட்டப்பட்டுள்ளதோ? ரசிகர்களின் கமெண்ட்ஸ்.!
ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. 22 போட்டிகள் முடிவு பெற்றுள்ள நிலையில் சென்னை, கொல்கத்தா அணிகள் மோதும் 23 வது போட்டி சென்னை அணியின் சொந்த மண்ணில் நடைபெற உள்ளது. இதுவரை நடைபெற்ற 22 போட்டிகளில் கொல்கத்தா, சென்னை, பஞ்சாப் மற்றும் கைதராபாத் அணிகள் புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடத்தில் உள்ளது.
இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடியுள்ள ராஜஸ்தான் அணி நான்கு போட்டிகளில் தோல்வியைத் தழுவி உள்ளது. ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றதன் மூலம் 2 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட்ரைடர்ஸ் இடையே நடந்த ஒரு போட்டியின் போது 4வது ஓவரில் க்ரிஸ் லின் எதிர்கொண்ட பந்து ஸ்டெம்பில் பட்டது. அப்பொழுது ஸ்டம்பின் மேல் இருந்த பெயில் கீழே விழவில்லை. அதனால் விதிமுறைபடி லின் தனது விக்கெட்டை இழக்காமல் தொடர்ந்து விளையாடினர்.
இதே போன்றதொரு சம்பவம் சென்னை அணிக்கு எதிராக விளையாடிய போதும் நடந்தது. ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சாளர் ஆர்ச்சர் வீசிய பந்தை எதிர்கொண்ட கேப்டன் டோனியின் காலில் பட்டு பந்து ஸ்டம்பைத் தாக்கியது. ஆனால் மேல் இருந்த பெயில் கீழே விழாததால் தோனி தப்பித்தார் அந்த ஆட்டத்தில் 46 பந்துகளை சந்தித்த தோனி 75 ரன்கள் குவித்தார். அதில் 4 பவுண்டரிகளும் 4 சிக்சர்களும் அடங்கும்.
The bails in IPL is the greatest ad for Fevicol ever.
— Arjun (@_WellOfCourse) April 7, 2019
இதனால் ராஜஸ்தான் ரசிகர்கள் ராஜஸ்தான் அணிக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது டெம்பில் பெவிகால் ஏதும் ஒட்டப்பட்டுள்ளதோ? என்று சமூகவலைதளங்களில் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
@StuckByFevicol @IPL have u both partnered in making these Stumps & bails ?? pic.twitter.com/veT5cYzal7
— Gnaneswar Reddy J (@gnaneswar_j) April 7, 2019