குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
இந்த நேரத்துல இப்படியா பேசுவீங்க.? விராட் கோலி-கங்குலியை சரமாரியாக விளாசிய கபில் தேவ்.!!
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தலா மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட், ஒருநாள் தொடர் மற்றும் 4 போட்டிகள் கொண்ட T20 தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளது. அங்கு முதலில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. டெஸ்ட் அணிக்கு விராட் கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.டெஸ்ட் அணியின் துணைக்கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், ஒருநாள், டி20 அணிகளுக்கு ரோஹித் ஷர்மா கேப்டனாக செயல்படவுள்ளார்.
இந்திய அணியின் ஒருநாள் கேப்டன் பதவியில் விராட் கோலி நீக்கப்பட்டதால், அவருக்கும் பிசிசிஐ-க்கும் இடையே பிரச்சனை உள்ளதாக பேசப்பட்டு வருகிறது. ஏனெனில், விராட் கோலி தொடர்ந்து ஒருநாள் கேப்டன் பதவியில் இருக்க முடிவு செய்துள்ளார். ஆனால், ஒருநாள் மற்றும் டி20-க்கும் ஒரே கேப்டன் தான் இருக்க வேண்டும் என்பதால், ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார்.
இதனால் கோலிக்கும், பிசிசிஐ-க்கும் இடையே பெரிய மோதல் போக்கு நிலவி வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில், விராட் கோலி மற்றும் கங்குலி வெவ்வேறு மாதிரி பதிலளித்தனர். இதனால் உண்மையில் என்ன நடந்தது என்பது தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் ஆன கபில்தேவ், இதுதொடர்பான விஷயத்தில் கோபப்பட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், தற்போது இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது. இந்த சமயத்தில் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி பேசுவது சரி கிடையாது. தென் ஆப்பிரிக்கா தொடரில் கவனம் செலுத்துங்கள், உங்கள் பிரச்சனைக்கு விரைவில் முடிவு கட்டுங்கள் என்று தெரிவித்துள்ளார்.