மாரடைப்பால் பாதிக்கப்பட்டு ஆன்ஜியோ பிளாஸ்டி செய்து தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் கபில் தேவ்.! வெளியான புகைப்படம்!.



kapil-dev-hospital-photo-released

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டவர் கபில் தேவ். 61 வயதாகும் இவருக்கு நேற்று திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதால் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். 

அங்கு அவருக்கு ஆன்ஜியோ பிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு அவரது உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனனர். கபில் தேவ் தற்போது நலமுடன் இருப்பதாகவும், சில நாள்களில் கபில் தேவ் வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில் கபில் தேவ் விரைவில் குணமடைய வேண்டும் என்று இந்திய அணியின் பிரபல கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் இணையத்தில் பதிவிட்டனர்.

kabil devஇதனையடுத்து தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைபெற்றுவரும் கபில்தேவின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் அவர் மருத்துவமனையில் நலமுடன் இருப்பதாக கையை உயர்த்திக்காட்டி சிரித்த முகத்துடன் இருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.