சிம்பிளாக நடந்து முடிந்த பிக்பாஸ் பிரதீப் திருமணம்.! பொண்ணு யார் தெரியுமா?? வைரலாகும் புகைப்படம்.!
இந்திய அணி அரையிறுதிக்கு செல்வது உறுதி! சூசகமாக வெளிப்படுத்திய விராட் கோலி
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலககோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு நிச்சயம் செல்லும் என்பதனை சூசகமாக வெளிப்படுத்தியுள்ளார் விராட் கோலி.
10 அணிகள் கலந்து கொண்டுள்ள ஐசிசி உலக்கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு போட்டியில் முதல் சுற்றில் எதிர்கொள்ளும். முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
இந்த உலகக்கோப்பை தொடரில் இதுவரை ஒரு தனிப்பட்ட அணி வென்றுள்ளதை விட மழை தான் அதிகமுறை வென்றுள்ளது என கூற வேண்டும். இன்று இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியை சேர்த்து இதுவரை 4 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டுள்ளன.
இதனால் இந்த உலகக்கோப்பை தொடரில் அணிகளில் புள்ளிப்பட்டியலை நிர்ணயிப்பதில் மழையின் பங்கு அதிகமாகவே உள்ளது. எனவே எந்த அணிகள் அரையிறுதிக்கு செல்லும் என்பதனை கணிப்பதில் பலரும் குழப்பமடைந்துள்ளனர்.
இந்நிலையில், இன்று ஆட்டம் ரத்து செய்யப்பட்ட பினபு பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியிடம் தவானின் உடல்நிலை குறித்து விசாரிக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கோலி, "தவான் அடுத்த இரண்டு வாரங்களுக்கு ஓய்வில் இருப்பார். அதற்கு பின்பு அவரது நிலையை பரிசோதித்து வேண்டிய முடிவினை எடுப்போம். அவர் விரைவில் குணமாகி கடைசியில் நடைபெறும் லீக் ஆட்டங்களிலும் அரையிறுதி போட்டிகளிலும் பங்கேற்பார் என்ற நம்பிக்கை உள்ளது" என தெரிவித்தார்.
விராட் கோலியின் இந்த பதில் இந்திய அணி ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதிபெற்று விட்டது போல் அமைந்துள்ளது. கோலியின் இந்த நம்பிக்கை அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.