96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
புதிய வரலாற்று சாதனை படைத்த விராட் கோலி! குவியும் பாராட்டு மழை
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் இந்திய அணியின் கேப்டனாகவும் இருந்து வரும் விராட் கோலி மூன்று தலைசிறந்த சர்வதேச விருதுகளை ஒரே சமயத்தில் பெற்று புதிய சாதனையை படைத்துள்ளார்.
இந்திய அணிக்காக 20 வயதில் 2009 ஆம் ஆண்டு முதல் ஆடி வருகிறார் விராட் கோலி. மிக விரைவில் பல் சாதனைகளைப் படைத்து வரும் கோலி கிரிக்கெட் ஜாம்பாவான் சச்சினின் அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும் அளவிற்கு சிறப்பாக ஆடி வருகிறார். இதுவரை 77 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள அவர் 25 சதங்களுடன் 6616 ரன்களும், 219 ஒருநாள் போட்டிகளில் 37 சதங்களுடன் 10385 ரன்கள் எடுத்துள்ளார்.
டெஸ்ட மற்றும் ஒருநாள் பேட்ஸ்மன்களின் தரவரிசை பட்டியல்லில் மாறி மாறி முதலிடத்தை பிடித்து வந்தார் கோலி. இந்நிலையில் இதுவரை எந்த கிரிக்கெட் வீரரும் அடையாத சாதனையை கோலி பெற்றுள்ளார். ஐசிசி ஒவ்வொரு ஆண்டும் வழங்கும் சிறந்த வீரருக்கான மூன்று விருதுகளை ஒரே சமயத்தில் பெற்று சாதனை படைத்துள்ளார்.
For the second year running, @imVkohli is the ICC Men's ODI Cricketer of the Year! 👏
— ICC (@ICC) January 22, 2019
He scored 1,202 ODI runs in 2018 at a stunning average of 133.55. He also became the fastest to reach the milestone of 10,000 runs in the format.
➡️ https://t.co/ROBg6RI4aQ#ICCAwards 🏆 pic.twitter.com/m2CPb0vIGF
2018 ஆம் ஆணடிற்கான் ஐசிசி விருது பெரும் வீரர்களின் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரர் என்ற விருதையும், தொடர்ந்து இரண்டாவது முறையாக ஐசிசி சிறந்த ஒருநாள் வீரர் விருதையும், முல்முறையாக ஐசிசி சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதினையும் பெற்றுள்ளார். மேலும் ஐசிசி ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
🇮🇳 @imvKohli has been named ICC Men's Test Cricketer of the Year for the first time!
— ICC (@ICC) January 22, 2019
He was the top run-scorer in Tests with 1,322 runs at an average of 55.08, with centuries in each of South Africa, England, India and Australia.
➡️ https://t.co/ROBg6RI4aQ#ICCAwards 🏆 pic.twitter.com/GVBBYndUwg
இந்த விருதுகள் அனைத்தையும் ஒரே நேரத்தில் பெறும் முதல் வீரர் விராட் கோலி மட்டுமே. விராட் கோலியின் இந்த சாதனையை பலரும் பாராட்டி வாழ்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து பேசியுள்ள விராட் கோலி, "இது மிகவும் சிறந்த தருணம். கடின உழைப்பிற்கு கிடைத்துள்ள வெற்றி. என்னுடன் சிறப்பாக ஆடி ஒத்துழைப்பு தரும் அணி வீரர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். பல வீரர்கள் விளையாடும் இந்த கிரிக்கெட்டில் இப்படி ஒரு சர்வதேச அங்கிகாரத்தை பெற்றிருப்பது மிகவும் பெருமையாக உள்ளது" என்று கூறியுள்ளார்.
37 matches, 47 innings.
— ICC (@ICC) January 22, 2019
2,735 runs at an average of 68.37.
11 centuries, 9 fifties.
What a year for @imvKohli! He wins the Sir Garfield Sobers Trophy for ICC Men's Cricketer of the Year 2018! 🙌
➡️ https://t.co/ROBg6RI4aQ#ICCAwards 🏆 pic.twitter.com/oeSClhcfJQ
ICC Men's Cricketer of the Year ✅
— ICC (@ICC) January 22, 2019
ICC Men's Test Cricketer of the Year ✅
ICC Men's ODI Cricketer of the Year ✅
Captain of ICC Test Team of the Year ✅
Captain of ICC Men's ODI Team of the Year ✅
Let's hear from the man himself, @imvKohli! #ICCAwards 🏆 pic.twitter.com/3M2pxyC44n