96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
இந்த இரண்டு பேர் மீது தான் அதிகப்படியான நம்பிக்கை வைத்திருந்தேன்.. தினேஷ் கார்த்திக் பாராட்டு.!
13 ஐபிஎல் கிரிக்கெட் போட்டியானது ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலாகலமாக நடைப்பெற்று வருகிறது. டி20 தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. அதில் முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.
கொல்கத்தா அணியின் வெற்றி குறித்து அந்த அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் இவ்வாறு பேசியுள்ளார். அதாவது சென்னை அணி வீழ்ச்சி பெறுவதற்கு எங்கள் அணியின் மிக சிறந்த வீரரான சுனில் நரைன் மற்றும் வருண் சக்கரவர்த்தி தான் முக்கிய காரணம் என பாராட்டி பேசியுள்ளார்.
மேலும் பேசிய தினேஷ் கார்த்திக், நான் சுனில் நரைன் மற்றும் வருண் சக்கரவர்த்தி மீது அதிகப்படியான நம்பிக்கை வைத்திருந்தேன். இருவரும் எனது நம்பிக்கையை காப்பாற்றி விட்டார்கள் என பாராட்டி பேசியுள்ளார்.