கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
புதிய சாதனையுடன் உலகக் கோப்பை வாழ்க்கையை விட்டு வெளியேறுகிறார் மும்பை இந்தியன்ஸ் சாம்பியன்! ரோஹித் உருக்கமான பேச்சு!
உலகக் கோப்பையின் லீக் ஆட்டம் நேற்றுடன் முடிவு பெற்றது. நேற்றைய போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வென்றது. நேற்றைய ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை அணி, 7 விக்கெட் இழப்புக்கு 264 ஓட்டங்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மேத்யூஸ் 113 ஓட்டங்களும், திரிமன்னே 53 ஓட்டங்களையும் எடுத்தனர்.
இதனையடுத்து 265 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 3 விக்கெட் இழப்புக்கு 265 ரன் எடுத்து அபாரமாக வெற்றி பெற்றது. நேற்றைய போட்டியே உலகக் கோப்பை தொடரில், மலிங்காவின் கடைசி போட்டியாகும்.
These Legends innings comes to end .....#ImranTahi , #Malinga,#Duminy.
— Itachi (@66f2d8a411484db) 6 July 2019
Always in our heart .#mumbaiindians pic.twitter.com/XFFKHN8Fs6
நேற்றைய போட்டியில், 10 ஓவர்கள் வீசிய மலிங்கா 82 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றினார். இதன் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரமை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடத்தை பிடித்தார் மலிங்கா.
உலகக் கோப்பை வரலாற்றில் 56 விக்கெட்டுகளை வீழ்த்திய மலிங்கா, 3 வது அதிக விக்கெட் கைப்பற்றிய வீரராக தனது உலகக் கோப்பை வாழ்க்கையை முடித்தார். இவரை பற்றி நேற்றைய ஆட நாயகன் ரோஹித் சர்மா கூறுகையில், மலிங்கா இலங்கைக்கும் மும்பை இந்தியன்ஸுக்கும் சாம்பியன் பந்துவீச் சாளராக இருந்திருக்கிறார். அவர் சிறந்த மேட்ச் வின்னர். அவருக்கும் எனக்கும் சிறப்பான நட்பு இருக்கிறது. மலிங்காவை நெருக்கமாகப் பார்த்திருப்பதால் சொல்கிறேன், அவரை கிரிக்கெட் உலகம் நிச்சயம் இழக்கும் என கூறினார்.