96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
இதுவரை ஒரு போட்டியில் கூட களமிறக்கப்படாத சென்னை அணியின் அதிரடி வீரர்! யார் தெரியுமா?
ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 22 போட்டிகள் முடிவு பெற்றுள்ள நிலையில் கொல்கத்தா, சென்னை, பஞ்சாப் மற்றும் கைதராபாத் அணிகள் புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடத்தில் உள்ளது. நேற்றைய ஆட்டத்தில் கைதராபாத் அணியை பஞ்சாப் அணி வெற்றிபெற்று புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது.
இந்நிலையில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் கொல்கத்தா, சென்னை அணிகள் இன்று மோதுகிறது. இன்று இரவு 8 மணிக்கு சென்னையில் இந்த ஆட்டம் நடைபெற உள்ளது. இதுவரை நடந்த 5 போட்டிகளில் சென்னை அணி 4 போட்டிகளில் வெற்றிபெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. சென்னை அணியின் வீரர்கள் அனைவரும் சிறப்பாக விளையாடிவருகின்றனர்.
இந்நிலையில் சென்னைக்காக அதிரடியாக விளையாடிய சென்னை வீரர் முரளி விஜய் இதுவரை ஒரு போட்டிகளில்கூட களமிறக்கப்படவில்லை. ஐபில் போட்டிகளின் ஆரம்ப காலத்தில் முரளி விஜய்யின் அதிரடி ஆட்டத்தால் சென்னை அணி பல்வேறு போட்டிகளை வென்றது குறிப்பிடத்தக்கது.
2010 ஆம் ஆண்டு, ஐபில் போட்டியின் மூன்றாவது சீசனில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக 56 பந்துகளில் 127 ரன் எடுத்து சென்னை அணியின் பிரமாண்ட எண்ணிக்கைக்கு கைகொடுத்தார் முரளி விஜய். ஆனால், தற்போது சரியான பார்ம் இல்லாததால் களமிறக்கப்படாமல் காத்திருப்போர் பட்டியலில் உள்ளார் முரளி விஜய்.