96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
முதல் முறையாக சென்னை அணியில் களமிறங்கும் அதிரடி வீரர்! யார் தெரியுமா?
ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 43 போட்டிகள் இதுவரை முடிந்துள்ள நிலையில் சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னியின் சொந்த மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் சென்னை அணி ஏறக்குறைய அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டது.
புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் மும்பை அணிக்கு இன்றிய ஆட்டம் மிகவும் முக்கியமானது. இந்நிலையில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. அணியின் கேப்டன் தோணி உடல்நல குறைவால் இன்று ஓய்வில் இருப்பதால் ரைனா இன்று கேப்டனாக நியமிக்கப்ட்டுள்ளார்.
அதேபோல ஆல்ரவுண்டர் ஜடேஜாவும் இன்றைய ஆட்டத்தில் இருந்து விளக்கியுள்ளார். நீண்ட இடைவேளைக்கு பிறகு சென்னை அணியின் அதிரடி வீரர் முரளி விஜய்க்கு இன்று வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் இதுவரை ஒரு போட்டிகளில் கூட களமிறக்கப்படாத முரளி விஜய் இன்று முதல் முறையாக களமிறங்கவுள்ளார்.