கிறிஸ் கெயில் புதிய உலக சாதனை; பாகிஸ்தானை தெறிக்க விட்ட வெ.இண்டீஸ் மிரட்டல் வெற்றி.!



pak-vs-west-indies---highest-sixes-in-world-cup---chris

இங்கிலாந்தில் தொடங்கியுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது ஆட்டம் இன்று நாட்டிங்காமில் பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்று வருகிறது. ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங்கை துவங்கிய பாகிஸ்தான் அணி ஆரம்பத்திலிருந்தே சரிவை சந்தித்தது. மூன்றாவது ஓவரில் இமாம் அவுட்டாக அலனைத் தொடர்ந்து விக்கெட்டுகள் ஒவ்வொன்றாக சரிந்தது. ஹோல்டர், ரஸ்ஸல், தாமஸ் என வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்கள் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை திணறடித்தனர்.

gayle

பாகிஸ்தான் அணியின் பக்கர் ஷமாம் மற்றும் பாபர் ஷமாம் மட்டும் அதிகபட்சமாக 22 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் அணி 22 ஆவது ஓவரிலேயே 105 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 13.4 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் கிறிஸ் கெயில் 34 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சர் என 50 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதன் மூலம் உலகக்கோப்பை கிரிக்கெட் அரங்கில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் தென் ஆப்ரிக்க வீரர் டிவிலியர்ஸ் சாதனையை தகர்த்தார் கெயில். 



 

உலகக்கோப்பை கிரிக்கெட் அரங்கில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியல்: 
கிறிஸ் கெயில் (விண்டீஸ்) - 40 சிக்சர் (27 போட்டிகள்) 
டிவிலியர்ஸ் (தென் ஆப்ரிக்கா) - 37 சிக்சர் (23 போட்டிகள்) 
ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) - 31 சிக்சர் (46 போட்டிகள்) 
பிரண்டன் மெக்கலம் (நியூசி.,) - 29 சிக்சர் (34 போட்டிகள்) 
கிப்ஸ் (தென் ஆப்ரிக்கா) - 28 சிக்சர் (25 போட்டிகள்) 



 

தவிர, சர்வதேச ஒருநாள் அரங்கில் கெயில் அடித்த 317வது சிக்சராக அமைந்தது. இதன் மூலம் ஒருநாள் அரங்கில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் கிறிஸ் கெயில் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார். இப்பட்டியலில் முன்னாள் பாகிஸ்தான் வீரர் அப்ரிடி (351 சிக்சர்கள்) ‘நம்பர்-1’ இடத்தில் நீடிக்கிறார். 

ஒருநாள் அரங்கில் அதிக சிக்சர்கள் அடித்த ‘டாப்-5’ வீரர்கள் பட்டியல்: 
அப்ரிடி (பாக்.,) - 351 சிக்சர்கள் 
கெயில் (விண்டீஸ்) - 317 சிக்சர்கள் 
ஜெயசூர்யா (இலங்கை) - 270 சிக்சர்கள் 
தோனி (இந்தியா) - 224 சிக்சர்கள் 
ரோகித் சர்மா (இந்தியா) - 218 சிக்சர்கள்.