3 நாட்களில் ரூ.127.64 கோடி.. கங்குவா திரைப்படத்தின் நிலவரம்.!
இந்தமுறை அப்படி செய்யவே கூடாது.. அஸ்வினுக்கு ரிக்கி பாண்டிங் கண்டிஷன்!
கடந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்தார் அஸ்வின். அப்போது அவர் மன்கட் முறையை பயன்படுத்தி ஜோஸ் பட்லரின் விக்கெட்டை வீழ்த்தியது பல விமர்சனங்களை பெற்றது.
பந்து வீசுவதற்கு முன்பு ஆடா முனையில் இருக்கும் பேட்ஸ்மேன் கிரீஸை வட்டு வெளியேறுவது ஒருவகையான ஏமாற்றுதல் தான். ஆனால் அதற்காக மன்கட் முறையை பயன்படுத்தி விக்கெட்டை வீழ்த்துவது முறையல்ல என டெல்லி கேப்பிடஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் ஏற்கனே தெரிவித்திருந்தார்.
இந்த கருத்தை தற்போது டெல்லி கேப்பிடஸ் அணியில் இருக்கும் அஸ்வினிடம் நிச்சயம் தெரிவிப்பேன் எனவும் பாண்டிங் கூறியிருந்தார். அவர் ஏற்கனவே சொன்னதைப் போன்ற தற்போது ஐபிஎல் 2020 தொடருக்காக தயாராகிவரும் அஸ்வினிடம் பயிற்சியாளர் என்ற முறையில் மன்கட் முறையை இந்த தொடரில் பயன்படுத்த வேண்டாம் என கூறியுள்ளார்.
விக்கெட்டை வீழ்த்துவதற்கு பதிலாக பந்துவீசுவதை நிறுத்தி விட்டு வார்னிங் கொடுப்பது தான் நாகரீகம். எனவே இந்த தொடரில் நீங்கள் அதை செய்யுங்கள் என பாண்டிங் அஸ்வினிடம் தெரிவித்துள்ளார்.