96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
உணர்ச்சி வசப்பட்ட ரிஷப் பந்த்!! கண்ணீர்விட்டு அழுத ரவி சாஸ்திரி.!! இந்திய அணியில் நடந்த உணர்வுபூர்வமான சம்பவம்..
ஆஸ்திரேலியா தொடரின்போது இந்திய அணியில் நடந்த உணர்வு பூர்வமான சில சம்பவங்கள் குறித்து பேசியுள்ளார் குல்தீப் யாதவ்.
நடந்து முடிந்து இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக இந்திய அணி ஆஸ்திரேலியா நாட்டிக்கரு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் விளையாடியது. ஒருநாள் போட்டியை தவிர மற்ற இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி கோப்பையையும் கைப்பற்றி சாதனை படைத்தது.
இதில் மிகவும் முக்கியமாக கருதப்படுவது காப்பா வில் நடந்த டெஸ்ட் போட்டிதான். காப்பா மைதானத்தில் நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ஆட்டம் மிகவும் சிறப்பாக அமைந்தது. குறிப்பாக புஜாரா, பந்த் உள்ளிட்டவர்கள் கலக்கல் ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை வெற்றிபெற செய்தனர்.
இந்த வெற்றியை முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் ரசிகர்கள் என உலகமே கொண்டாடியது. இந்நிலையில் இந்த வெற்றி குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய குல்தீப் யாதவ், "காப்பாவின் வெற்றியை அடுத்து தலைமை கோச் ரவி சாஸ்திரி மகிழ்ச்சியில் அழுதுவிட்டதாக தெரிவித்தார். மேலும், இந்திய அணி வீரர்கள் அனைவரும் நெகிழ்ச்சியடைந்ததாகவும், குறிப்பாக ரிஷப் பந்த் மிக மிக நெகிழ்ச்சியுடன் காணப்பட்டார்" எனவும் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.