3 நாட்களில் ரூ.127.64 கோடி.. கங்குவா திரைப்படத்தின் நிலவரம்.!
"உலகக்கோப்பையை இந்த அணி தான் வெல்லும்" - சாதனை கேப்டன் ரிக்கி பாண்டிங் விளக்கம்
ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் அந்த அணிக்கு இரண்டு முறை உலக்க்கோப்பையை வென்று கொடுத்தவர். இவர் சமீபத்தில் நடந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் பயிற்சியாளராக இருந்தார்.
வரும் மே 30 ஆம் தேதி இங்கிலாந்தில் துவங்கவிருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி தான் சாம்பியன் பட்டத்தை தட்டிச் செல்லும் என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். மேலும் அதற்கான காரணத்தையும் விளக்கியுள்ளார்.
இதுகுறித்து ரிக்கி பாண்டிங் தெரிவிக்கையில், "இயான் மார்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி தற்போது மிகப்பெரிய பார்மில் உள்ளது. தற்போது ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணிக்கு தனது சொந்த மண்ணில் இந்த தொடரை ஆடுவது மேலும் கூடுதல் பலமாகும். எனவே அவர்கள் கோப்பையை வெல்வார்கள் என நம்புகிறேன்.
ஆனால் அதே சமயத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளிடம் இருந்து இங்கிலாந்திற்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட வாய்ப்பிருக்கிறது. சமீபத்தில் இங்கிலாந்து அணி பாகிஸ்தானை 4-0 என்று 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வென்றது. இதன் 5 போட்டிகளிலும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் 340 ரன்களுக்கு மேல் குவித்தனர்.
வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் போன்ற அணிகள் எந்த சமயத்திலும் வலுவான அணிகளை வீழ்த்தும் திறமை கொண்டவை. எனவே இந்த உலகக்கோப்பை நிச்சயம் சவால் நிறைந்ததாக இருக்கும். ஆஸ்திரேலியா அணியும் வார்னர் மற்றும் ஸ்மித் அணிக்கு திரும்பியதில் மீண்டும் பலம் வாய்ந்ததாக உருவெடுத்துள்ளது. எனவே ஆஸ்திரேலியாவும் நல்ல சவாலை கொடுக்கும்" என்று கூறியுள்ளார்.