96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
ரோஹித் ஷர்மாவுக்கு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியது போல் ரூ.12 லட்சம் அபராதம்.! என்ன காரணம்.?
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் டி20 ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதியது. அந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் தோல்வியை தழுவியது. மேலும், அந்த ஆட்டத்தில் மும்பை அணி குறிப்பிட்ட நேரத்தில் பந்து வீசி முடிக்காமல் அதிக நேரம் எடுத்துக் கொண்டது.
இந்தநிலையில் மெதுவாக பந்து வீசியதற்காக கேப்டன் என்ற முறையில் ரோஹித் சர்மா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய சீசனில் ஓவர்-ரேட் பெனால்டியைப் பெற்ற முதல் கேப்டனாக ரோஹித் சர்மாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
போட்டியிலும் தோல்வியடைந்து அபராதமும் கட்டுவதும் ரோஹித் ஷர்மாவுக்கு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியது போல் ஆனது. குறைந்தபட்ச விதி மீறல் தொடர்பான ஐபிஎல் நடத்தை விதிகளின்படி இந்த சீசனின் முதல் குற்றமாக இது இருந்ததால், மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது என ஐபிஎல் நிர்வாகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.