ரோகித் சர்மாவுக்கு இரவில் தூங்கமுடியாத அளவிற்கு குடைச்சல் கொடுத்த 2 பவுலர்கள்!



Rohith sharma talk about duff bowler

ரோகித் சர்மாவுக்கு குடைச்சல் கொடுத்த 2 பவுலர்கள் பிரெட்லீ மற்றும் தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் என தெரிவித்துள்ளார்.

பல நாடுகளுக்குச் சென்று விளையாடி வந்த கிரிக்கெட் வீரர்கள் கொரோனா காரணமாக வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர். இந்த நிலையில் விளையாட்டு வீரர்கள் சமூக வலைத்தளங்களில் உரையாடி வருவதே ரசிகர்களுக்கு சுவாரஸ்யமாக உள்ளது. அந்தவகையில் சமூக வலைதளம் மூலம் கலந்துரையாடலில் இணைந்திருந்த இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மாவிடம் ஆரம்ப காலத்தில் உங்களை மிரட்டிய பவுலர்கள் யார் என்று கேட்கப்பட்டது.

rohit

அதற்கு பதிலளித்த டான் ரோஹித், நான் இந்திய அணிக்குள் நுழைந்த போது ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரெட்லீ உலகின் அதிவேக பவுலராக திகழ்ந்தார். 2007-ம் ஆண்டு ஒரு நாள் தொடரின் போது, மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்துக்கு மேல் பந்து வீசும் அவரது பந்து வீச்சை எப்படி எதிர் கொள்வது என்று சிந்தித்துக் கொண்டே இருப்பேன். இதனால் எனது தூக்கத்தையும் கூட தொலைத்திருக்கிறேன்.

அதேபோல தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் நல்ல வேகத்துடன் பந்தை ஸ்விங் செய்து வீசுவார். அவரது பந்து வீச்சு நம்ப முடியாத அளவுக்கு இருக்கும். அதனால் அவரது பந்து வீச்சை ஒரு போதும் சந்திக்கக் கூடாது என்று நினைப்பேன். எனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய போது, இவர்கள் இருவரது பந்து வீச்சையும் எதிர்கொள்ள கடினமாக இருந்தது என தெரிவித்தார்.