கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
கிரிக்கெட்டில் தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் குறைந்ததற்கு காரணம்!சச்சின் டெண்டுல்கர்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் மிகவும் குறைவாகவே உள்ளனர். இதனால் டெஸ்ட் போட்டியின் தரம் குறைந்து விட்டது என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட்டில் உலகதர பவுலர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் மட்டுமே போட்டி நிலவுவதாக தெரிவித்தார்.
மேலும் ஐ.பி.எல். போட்டியில் ஒருவர் சிறப்பாக செயல்பட்டால் அவரை சர்வதேச 20 ஓவர் போட்டிக்கான அணியில் சேர்க்கலாம். அதேநேரத்தில் ஐ.பி.எல். போட்டியில் நன்றாக செயல்படும் ஒருவரை டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான அணியில் சேர்த்தால் அது கேள்விக்குறியாகி விடும். இது பும்ரா போன்ற திறமையான சில வீரர்களுக்கு விதிவிலக்காகும் என தெரிவித்தார்.
மேலும், டெஸ்ட் போட்டிகளின் தரத்தை உயர்த்தினால் மட்டுமே ரசிகர்களுக்கு சிறந்த விளையாட்டு அனுபவத்தை அளிக்க முடியும் என்றும் கிரிக்கெட் ஜாம்போவான் சச்சின் டெண்டுல்கர் கூறினார்.