நடிகர் விஷாலுக்கு என்னதான் ஆச்சு? வெளியானது மருத்துவ அறிக்கை.! விபரம் உள்ளே.!
இரண்டாவது ஒருநாள் போட்டி.. அசத்துவாரா அறிமுக வேகப்பந்து வீச்சாளர்.. தொடரை வெல்லுமா இந்தியா!
மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடுகிறது.
தவான் தலைமையில் முதல் ஒருநாள் போட்டியில் விளையாடிய இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை தோற்கடித்து 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.
இந்தப்போட்டியில் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் கான் சர்வதேச அளவில் தனது முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகமாகிறார். இவர் ஏற்கனவே இந்திய அணிக்காக 9 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். முதல் போட்டியில் விளையாடிய பிரசித் கிருஷ்ணாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
டாஸ் வென்ற வெஸ்ட் அணியின் கேப்டன் பூரன் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் மோட்டிக்கு பதிலாக ஹெய்டன் வால்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.