96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
திறமை இருந்தும் 30 வயதில் கூட வாய்ப்பு கொடுக்காதது கொடுமை.. அந்த ஒரு வீரருக்காக குவியும் ஆதரவு!
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் பட்டியல் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியானது. இதில் பல ஆச்சர்யங்களையும் ஏமாற்றங்களையும் கொடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் பல இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வரும் சூர்யகுமார் யாதவிற்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து சூர்யகுமாருக்கு ஆதரவாக பலர் பிசிசிஐயிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் திலீப் வெங்கசர்க்கார் அவரை ஏன் தொடர்ந்து புறக்கணிக்கிறார்கள் என தெரியவில்லை என கூறியுள்ளார்.
மேலும் தற்போது வாய்ப்பு கிடைக்காத வீரர்களில் இவர் தான் திறமையான வீரர். இந்திய அணியில் உள்ள வேறு சில வீரர்களை விட இவர் நன்றாக விளையாடுகிறார். ஒருவர் 26-34 வயதில் தான் நன்றாக விளையாட முடியும்.
30 வயதான சூர்யகுமாருக்கு வாய்ப்பு வழங்க இதுதான் சரியான தருணம். அவரை புறக்கணிக்க என்ன காரணம் என கங்குலி உடனே விசாரிக்க வேண்டும் என வெங்கசர்க்கார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.