குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
பாவம்! ஜென்டில்மேன் ஏபி டிவில்லியர்ஸ் வாழ்க்கையில் இப்படி ஒரு சோக நிகழ்வா!
தென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை வரை விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தென்ஆப்பிரிக்கா மண்ணில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை தென்ஆப்பிரிக்கா கைப்பற்றிய பிறகு திடீரென கடந்த ஆண்டு மே மாதம் தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.
பின்னர் இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடினார். தற்போது நடைபெற்று வரும் உலககோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா அணியில் மீண்டும் அவர் இடம்பெற விருப்பம் தெரிவித்ததாகவும், அணி நிர்வாகம் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியாகின.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், '' நான் ஓய்வு அறிவித்த தினத்தன்று என்னிடம் தனிப்பட்ட முறையில் உலகக்கோப்பைக்கு வரும் எண்ணமுள்ளதா என்று கேட்கப்பட்டது. நான் ஆமாம் என்றேன். அப்போதே நான் வேண்டாம் என்று கூறியிருக்க வேண்டும் என்று இப்போது தோன்றுகிறது. என்னுடைய இயல்பான மனநிலை எதையும் யார் கேட்டாலும் மறுக்காது. உடனடியாக பதில் தர வேண்டும் என்பதால் ஆம் என கூறிவிட்டேன்.
ஆனால், அதன் பிறகு எனக்கும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அவர்களும் என்னை அழைக்கவில்லை, நானும் அவர்களை அழைக்கவில்லை.
நானும் டு பிளிசிஸும் பள்ளியில் இணைந்து படித்து வந்த காலத்தில் இருந்தே நண்பர்களாக இருக்கிறோம். உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன் அவரைத் தொடர்பு கொண்டு நான் பேசினேன்.
ஐபிஎல் தொடரில் நான் ஓரளவிற்கு சிறப்பாக விளையாடினேன். நான் ஓய்வு பெறும்போது அணியில் இருக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. தற்போது அதுபோன்று கோரிக்கை இருந்தால் நான் விளையாடுகிறேன். ஆனால், கோரிக்கை இருந்தால் மட்டுமே என்றேன்.
உண்மையிலேயே நான் கட்டாயப்படுத்த வில்லை. உலகக்கோப்பை தொடருக்கு முன் அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்று முயற்சி செய்தது இல்லை. அணியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்ததும் கிடையாது. என்னுடைய பக்கத்தில் இருந்து குற்றம்சாட்ட ஏதுமில்லை. அநீதி என்று சொல்வதற்கு ஏதுமில்லை. ஆனால் என்னைப் பற்றி மிகவும் தவறாக சித்தரிக்கப்பட்டுவிட்டது. அப்பவே பேசினால் உலகக்கோப்பை தொடரில் ஆடும் வீரர்களின் மனநிலை பாதிக்கப்படும் என எண்ணியதால் தான் இப்போது பேசுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
— AB de Villiers (@ABdeVilliers17) July 12, 2019