கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
“பாக்கிஸ்தானுக்கு வாய்ப்பு; நியூசிலாந்துக்கு ஆப்பு" தலைகீழாக மாறும் புள்ளிப்பட்டியல்!
10 அணிகள் கலந்து கொண்டுள்ள உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்று இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும்.
இதுவரை 7 போட்டிகளில் வென்று 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே அரையிறுதிக்குள் நுழைந்துவிட்டது. 11 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி மீதமுள்ள 2 ஆட்டங்களில் ஒரு புள்ளி பெற்றாலே அரையிறுதிக்குள் நுழைந்துவிடும்.
அடுத்த இரண்டு இடங்களுக்கு தற்பொழுது நான்கு அணிகள் போட்டி போடுகின்றன. 11 மற்றும் 10 புள்ளிகளுடன் 3 மற்றும் நான்காவது இடத்தில் இருக்கும் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அடுத்த போட்டியில் மோத உள்ளன. இதில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றால் எந்தவித தடையுமின்றி அரையிறுதிக்குள் நுழைந்து விடும். பாகிஸ்தான் அணி பங்களாதேஷை வீழ்த்திவிட்டால் அரையிறுதிக்குள் நுழைந்து விடும். இங்கிலாந்து வெள்யேற்றப்படும்.
நியூசிலாந்துக்கு எதிராக இங்கிலாந்து அணி வென்றால் இங்கிலாந்து அணி 12 புள்ளிகளுடன் அரை இறுதிக்குள் நுழைந்து விடும். பாகிஸ்தான் அணி பங்களாதேஷை அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்றால் நியூசிலாந்தை பின்னுக்குத் தள்ளிவிட்டு அரையிறுதிக்குள் நுழைய முடியும்.
ஒருவேளை பங்களாதேஷ் அணி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளை அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் நான்காவது அணியாக அரை இறுதிக்குள் நுழையவும் வாய்ப்பு உள்ளது.