கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
அடேங்கப்பா! உலக கோப்பையை வெல்லும் அணிக்கு இத்தனை கோடியா; முழு பரிசு விபரம் இதோ.!
சமீபத்தில் ஐபிஎல் சீசன் 12 வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. இதில் சென்னை, மும்பை அணிகள் பங்கேற்ற இறுதிப் போட்டி குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்ற நிலையில் தற்போது இயல்பு நிலை திரும்புகிறது. இந்நிலையில் இம்மாத இறுதியில் மே 30 உலகக் கோப்பைப் போட்டித் தொடர் தொடங்க உள்ளதால் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் களை கட்ட தொடங்கியுள்ளது.
மே 30 தொடங்கும் உலகக் கோப்பைப் போட்டித் தொடர் இவ்வாண்டு இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. வேல்ஸ் உள்ளிட்ட முக்கிய 8 நகரங்களில் நடைபெறும் இப்போட்டித்தொடரில் பங்கேற்க இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம், நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான் போன்ற 10 அணிகள் தேர்வாகியுள்ளது.
இங்கிலாந்து அல்லது இந்தியா தான் இந்த முறை கோப்பையை வெல்லும் என்று கிரிக்கெட் விமர்சகர்களால் கணிக்கப்படும் இப்போட்டி தொடருக்கு வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான் அணிகள் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் மூலம் தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், உலக கோப்பையில் கலந்து கொள்ளும் அணிகளுக்கு அவைகளின் வெற்றி தோல்வி அடிப்படையில் வழங்கப்படும் பரிசுத் தொகை பற்றிய முழு விபரங்களை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:
உலகக் கோப்பை வெல்லும் அணிக்கு - $4 மில்லியன் (28 கோடி)
இறுதிப் போட்டியில் தோல்வி அடையும் அணி - $2 மில்லியன் (14 கோடி)
அரையிறுதியில் தோல்வி அடையும் அணிகளுக்கு - $800,000 (5.6 கோடி)
லீக் தொடரில் அசத்தி முதல் 6 இடங்களுக்கு முன்னேறும் அணிக்கு தலா $ 100,000 (ரூ. 7 லட்சம்)
லீக் தொடரில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் அந்த அணி பெறும் பரிசுத் தொகை (45 போட்டிகளுக்கு) - $40,000 (28 லட்சம்)
மொத்த லீக் போட்டி பரிசுத் தொகை - $ 1,800,000
முடிவில் இந்த உலகக் கோப்பை தொடரில் தான் இதுவரை இல்லாத அளவிற்கு பரிசுத் தொகை $10 மில்லியன் (ரூ. 70 கோடி) வழங்கப்பட உள்ளது.