சிம்பிளாக நடந்து முடிந்த பிக்பாஸ் பிரதீப் திருமணம்.! பொண்ணு யார் தெரியுமா?? வைரலாகும் புகைப்படம்.!
சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து நேற்று படைத்த சாதனைகள்; என்னென்ன தெரியுமா?
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரின் ஆறாவது ஆட்டத்தில் நேற்று இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் இமாம் மற்றும் பக்கர் ஜமான் சிறப்பான துவக்கத்தை அளித்தனர்.
14 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி ஆடிய பாகிஸ்தான் அணி 82 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து வந்த ஹபீஸ் அதிரடியாக ஆடி 84 ரன்கள் குவித்தார். கேப்டன் சர்ப்ராஸ் தனது பங்கிற்கு 55 ரன்களை எடுத்தார். இதனை தொடர்ந்து 50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 348 ரன்கள் எடுத்தது எடுத்துள்ளது.
கடினமான இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய் (8), பேர்ஸ்டோவ் (32) சுமாரான துவக்கம் அளித்தனர். தொடர்ந்து வந்த கேப்டன் மார்கன் (9) ஏமாற்றினார். பென் ஸ்டோக்ஸ் (13) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். பின் இணைந்த பட்லர், ரூட் ஜோடி, அணியை சரிவில் இருந்து மீட்டது. பாகிஸ்தான் பவுலர்களின் பந்துவீச்சை இருவரும் பொளந்து கட்டினர். சீரான இடைவேளையில் இருவரும் பவுண்டரிகள் விளாசினர்.
முதல் ரூட், ஒருநாள் அரங்கில் தனது 15வது சதத்தை பூர்த்தி செய்தார். தவிர, இந்தாண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சதம் விளாசிய முதல் வீரர் என்ற பெருமை பெற்றார். இவர் 107 ரன்கள் எடுத்த போது சதாப் சுழலில் சிக்கினார். இவர் வெளியேறிய கொஞ்ச நேரத்திலேயே உலகக்கோப்பை அரங்கில் அதிவேக சதம் விளாசிய பட்லர் (103 ரன்கள், 75 பந்துகள்) அவுட்டாக, இங்கிலாந்து அணியின் ரன் வேகம் குறைந்தது.
கடைசி நேரத்தில் அமீர் வேகத்தில் ரன்கள் எடுக்க, மொயின் அலி (19), கிறிஸ் வோக்ஸ் (21) ஓரளவு அதிரடி கட்டி வெளியேறினர். இங்கிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 334 ரன்கள் எடுத்து 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இதன் மூலம் உலகக்கோப்பை கிரிக்கெட் அரங்கில் ஒரே இன்னிங்சில் இரண்டு பேட்ஸ்மேன் சதம் விளாசியும் தோல்வியை சந்தித்த ஒரே அணி இங்கிலாந்து என்ற மோசமான சாதனை படைத்தது இங்கிலாந்து அணி.
ஒருநாள் அரங்கில் தொடர்ச்சியாக 300 ரன்களுக்கு மேல் அடித்த அணிகள் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் சாதனையை இங்கிலாந்து அணி சமன் செய்தது.
ஆஸ்திரேலியா - 6 முறை, 2007
இங்கிலாந்து- 6 முறை, 2109
இலங்கை - 5 முறை, 2006
இந்தியா - 5 முறை, 2017