நடிகர் விஷாலுக்கு என்னதான் ஆச்சு? வெளியானது மருத்துவ அறிக்கை.! விபரம் உள்ளே.!
திடீரென ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த யுவேந்திர சஹால்.! அவரே வெளியிட்ட புகைப்படம்.!
இந்திய அணியின் பந்துவீச்சாளர் யுவேந்திர சஹால் எப்போதுமே அணைத்து வீரர்களுடனும் ஜாலியாகவே இருப்பார். இதன்காரணமாகவே இவருக்கு ரசிகர்களின் மனதில் தனி இடம் உண்டு என்றே கூறலாம்.
இந்தநிலையில் இந்திய அணியின் பந்துவீச்சாளர் யுவேந்திர சஹாலுக்கும், பிரபல நடன இயக்குனரும், யூடியூபருமான தனஸ்ரீ வர்மாவுக்கும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றிருந்தது. இவர்களின் திருமணம் எப்போது என்று பலரும் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தனர்.
22.12.20 💍
— Yuzvendra Chahal (@yuzi_chahal) December 22, 2020
We started at “Once Upon A Time” and found “Our Happily Ever After,” coz’ finally, #DhanaSaidYuz for infinity & beyond! pic.twitter.com/h7k3G3QrYx
ஆனால் அதைப் பற்றி எந்த ஒரு தகவலும் இல்லாத நிலையில், திடீரென்று சஹால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், தங்கள் இருவருக்கும் இன்று(22.12.2020) திருமணம் முடிந்துவிட்டதாக கூறி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதனைப்பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.