நாளை பிறக்கும் புரட்டாசி, அசைவம் சாப்பிட்டால் இப்படி எல்லாம் நடக்குமா.? அறிவியலும், ஆன்மீகமும்.!
புரட்டாசி மாதம் பிறந்தாலே பெருமாள் வழிபாடு தான் நமக்கு நினைவுக்கு வரும். இந்த மாதத்தில் பெருமாள் பக்தர்கள் விரதம் இருந்து கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வார்கள். அடுத்தது புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடக்கூடாது என்று கூறுவார்கள். எல்லா மாதங்களிலும் விரதம் இருந்தாலும் கூட புரட்டாசி மாதத்தில் மட்டும் அசைவ உணவை கட்டாயம் தவிர்த்து விடுகின்றனர்.
இது ஒரு வகையில் ஆன்மீகம் சம்பந்தப்பட்டதாக கூறப்பட்டாலும் இதற்குப் பின் அறிவியலும் இருக்கிறது. புரட்டாசி மாதத்தில் வெயில் மற்றும் காற்று இரண்டும் குறைந்து மழைக்காலம் துவங்க ஆரம்பிக்கும். சூடாக இருந்த பூமி மழை நீரினால் வெப்பம் குறைய ஆரம்பிக்கும். இந்த காலகட்டத்தில் மழைநீர் சூட்டை கிளப்பி விடும் என்பதால் மற்ற காலங்களில் ஏற்படும் வெப்பத்தை விட இது ஆபத்து நிறைந்ததாக கூறப்படுகிறது.
எனவே இந்த நாட்களில் அசைவம் சாப்பிடுவது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று கூறப்படுகிறது. இதனால், அஜீரண கோளாறு, வயிறு சம்பந்தப்பட்ட பல்வேறு தொந்தரவுகள் ஏற்படும். எனவே, தான் புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடக்கூடாது என்று கூறுவார்கள்.
மேலும் திடீர் வெப்ப மாறுபாடு, அரைகுறை மழை உள்ளிட்டவை நோய் கிருமிகளை உருவாக்கி விடும். இதனால், சளி, காய்ச்சல் போன்ற தொந்தரவு ஏற்படக்கூடும். எனவேதான் துளசி தண்ணீர் குடித்துவிட்டு, அசைவத்தை ஒதுக்கி விட்டு பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வதை முன்னோர்கள் ஏற்படுத்தி உள்ளனராம்.