ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
ஜூன் 15 ஆம் தேதி 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த அனுமதிக்க முடியாது..! தேர்வு தள்ளிப்போகும் வாய்ப்பு..! உயர்நீதிமன்றம் அதிரடி..!
ஜூன் 15-ல் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த அனுமதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஊரடங்கு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள 10 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் வரும் ஜூன் 15 முதல் 25 வரை நடைபெறும் என தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்ததோடு அதற்கான அட்டவணையையும் வெளியிட்டிருந்தது. இந்நிலையில் தேர்வு தொடங்க இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பத்தாம் வகுப்பு பொது தேர்வை தள்ளிவைக்கக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழக அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர், அதில் 9 லட்சம் மாணவர்கள், ஆசிரியர்கள், காவல்துறையினர், வருவாய்துறையினரை இக்கட்டான சூழலுக்கு ஆளாக்கவேண்டுமா?
பொது முடக்கம் அமலில் இருக்கும்போது 10 ஆம் வகுப்பு தேர்வுகளை நடத்த என்ன அவசரம்? பள்ளிகள் மீண்டும் திறப்பது குறித்து ஜூலை மாதத்தில் முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளநிலையில் அந்த முடிவை மாநில அரசு மீறுவது ஏன்? பல லட்சம் மாணவர்களின் நலனில் ஏன் ரிஸ்க் எடுக்குறீர்கள்? என பலவேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
மேலும், வரும் ஜூன் 15 ஆம் தேதி தேர்வை நடத்த அனுமதிக்க முடியாது எனவும், கொரோனா பாதிப்பு குறைந்த பின் தேர்வை நடத்தலாம், பத்தாம் வகுப்பு தேர்வுகளை ஜூலை மாதம் இரண்டாவது வாரத்தில் நடத்த முடியுமா என்பதை மதியம் 2 . 30 மணிக்குள் தெரிவிக்குமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.