96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
தேர்வில் காப்பி அடித்ததை ஆசிரியர் கண்டித்ததால் மாணவி எடுத்த விபரீத முடிவு.!
சிவகாசி அருகே தேர்வில் காப்பி அடித்ததை ஆசிரியர் கண்டித்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த ராஜ்-தனலட்சுமி என்ற தம்பதியினரின் மகள் அருகில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் மாணவி பள்ளியில் நடைபெற்ற தேர்வில் மற்றொரு மாணவியை பார்த்து காப்பி அடித்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்த ஆசிரியர் பெற்றோரை அழைத்து வரும்படி மாணவியிடம் கூறியுள்ளனர்.
இதனால் மணமுடைந்த மாணவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.