தமிழகத்தில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகிறது.? வெளியான தகவல்.!



12'th result in tamilnadu

தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் ஓரிரு நாட்களில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மாணவர்கள் நலன் கருதி தமிழக அரசு 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் எவ்வாறு கணக்கிடப்படும் என்ற விவரம் வெளியிடபட்டது.

அதன்படி தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள், மாணவர்களின் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் உயர் மதிப்பெண் பெற்ற 3 பாடங்களின் சராசரியாக 50 மதிப்பெண்களும், 11-ம் வகுப்பு எழுத்துத் தேர்வுகளின் அடிப்படையில் 20 மதிப்பெண்களும், 12-ம் வகுப்பு செய்முறை தேர்வு மற்றும் அக மதிப்பீட்டின் அடிப்படையில் 30 மதிப்பெண்களும் என்ற முறையில் கணக்கிடப்பட்டுள்ளது.

இதன்படி, கணக்கிடப்பட்டுள்ள மதிப்பெண் பட்டியல் தேர்வுத்துறையின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டன. அவற்றை சரி பார்க்கும் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது. இதனால், 12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் ஓரிரு நாட்களில் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை 31-ஆம் தேதிக்குள் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாளை அல்லது நாளை மறுநாள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.