96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
"வீட்டு செலவுக்கு வச்சிருந்த காசு எடுத்து குடிப்பியா..." ஆத்திரத்தில் தந்தையை அரிவாளால் போட்ட 17 வயது மகன்.!
விருதுநகர் மாவட்டத்தில் வீட்டு செலவிற்கு வைத்திருந்த பணத்தை எடுத்து தந்தை மது குடித்து செலவழித்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் மகன் தந்தையை படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு தாலுகாவுக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் கனிச்செல்வம். இவருக்கு ஒரு மகனும் 17 வயதில் மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டு செலவிற்காக வைத்திருந்த 4000 ரூபாயை எடுத்துச் சென்று கனிச்செல்வம் மது குடித்து வந்ததாக தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து வீடு திரும்பி அவரிடம் செலவிற்கு வைத்திருந்த பணத்தை எடுத்துச் சென்று ஏன் குடித்து வருகிறீர்கள் என மகன் கேட்டிருக்கிறார். இது தொடர்பாக தந்தை மகனுடைய ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த 17 வயது மகன் வீட்டில் கிடந்த அரிவாளை எடுத்து தந்தையை வெட்டி இருக்கிறார். இந்த தாக்குதலில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார் கனிச்செல்வம்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்த காவல்துறையினர் இறந்த கனிச்செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தந்தையை கொலை செய்த மகனை கைது செய்து அந்த சிறுவனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.