குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
வயது மூத்த பெண்ணை மனக்க ஆசைப்பட்ட இளைஞர்.! பெற்றோர் மறுத்ததால் செய்த அதிர்ச்சி காரியம்!!
திருப்பூர் மாவட்டம் கொமரலிங்கத்தில் வசித்து வந்தவர் மாரிமுத்து. 19 வயது நிறைந்த இவர் தன்னை விட 6 வயது மூத்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். மேலும் இருவரும் 10 நாட்களுக்கு முனபு வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்யவும் முயன்றுள்ளனர்.
இந்நிலையில் மாரிமுத்துவின் பெற்றோர் அவர்களது வயது வித்தியாசத்தை கூறி இருவரையும் பிரித்துள்ளனர். பின் அவசரஅவசரமாக அவரை கொடைக்கானலுக்கும் அனுப்பியுள்ளனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு பயங்கர குடிபோதையில் வீட்டிற்கு வந்த மாரிமுத்து மதுபாட்டிலை உடைத்து தந்தை கந்தசாமி, தாயார் முத்துலட்சுமி மற்றும் சகோதரர் சந்தோஷ் ஆகியோரை கடுமையாக தாக்கியுள்ளார்.
இதில் காயமடைந்த அவர்கள் 3 பேரும் அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக
அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பின்னர் இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் மாரிமுத்துவை கைது செய்து போலிசார் சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.