குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
எந்த குடும்பத்துக்கும் இப்படி ஒரு சோகம் வரக்கூடாது!! தாய்க்கு ஈமச்சடங்கு செய்யச் சென்ற மகன்கள் மரணம்..
இறந்துபோன தாய்க்கு ஈமச்சடங்கு செய்வதற்காக கடலுக்கு சென்ற மகன்கள் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நெல்லை மாவட்டம் வள்ளியூரை சேர்ந்த ரெனி என்ற பெண் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தநிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த வாரம் உயிரிழந்தார்.
உயிரிழந்த ரெனிக்கு ஈம சடங்கு செய்வதற்காக அவரது கணவர் ஜான் அருள் மற்றும் அவரது இரண்டு மகன்கள் கடற்கரைக்கு சென்றுள்ளனர். கடலில் இறங்கி ஈம சடங்குகளை முடித்த பிறகு, சகோதரர்கள் இருவரும் கடலில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது ராட்சச அலை ஒன்று சகோதரர்கள் இருவரையும் கடலுக்குள் இழுத்துசென்றாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள், கடலில் மூழ்கிய சகோதரர்களை காப்பாற்ற முயன்றும் அவர்களால் முடியவில்லை. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த கடலோர காவல் படையினர் சகோதர்களின் சடலங்களை மீட்டனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.