96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
இறந்துபோன தாயின் சடலத்தை வீட்டில் வைத்து 7 நாட்களாக மகள்கள் செய்த காரியம்!! பரபரப்பு சம்பவம்..
இறந்துபோன தாயின் சடலத்தை வைத்து, அவரை உயிருடன் எழுப்ப மகள்கள் ஜெபம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. சொக்கம்பட்டி என்னும் பகுதியில் ஓய்வு பெற்ற ஆசிரியை மேரி என்பவர் தனது இரண்டு மகள்களுடன் வசித்துவந்துள்ளார். மூத்த மகள் ஜெசிந்தா(43) பி.எட் பட்டதாரி. இரண்டாவது மகள் ஜெயந்தி (40).
இரண்டு மகள்களுக்கும் இதுவரை திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் இவர்கள் மூவரும் அந்த ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள தங்கள் வீட்டில் வசித்துவந்துள்ளனர். சமீபத்தில் அவர்களது உறவினர் ஒருவர் மேரியின் வீட்டிற்கு சென்றநிலையில், இறந்துபோன மேரியின் சடலத்தை வீட்டில் வைத்து, சடலத்தின் மீது பைபிளை வைத்தபடி மகள்கள் இருவரும் ஜெபம் செய்வதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
மேரி இறந்துவிட்டதாகவும், அவரை அடக்கம் செய்யும்படியும் மேரியின் மகள்களிடம் கூறியுள்ளார். ஆனால் அவர்களோ, தங்கள் அம்மா இன்னும் இறக்கவில்லை. அவர் உயிருடன்தான் இருக்கிறார் என கூறி உறவினரை அங்கிருந்து அடித்து விரட்டியுள்ளனர். அங்கிருந்து தப்பித்து வந்த அவர், நடந்த சம்பவம் குறித்து கிராம மக்களிடம் கூறியுள்ளார்.
கிராமமக்கள் இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கவே, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டிற்குள் நுழைய முற்பட்டபோது மகள்கள் இருவரும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்கள் தாயார் இன்னும் இறக்கவில்லை எனவும், ஜெபம் செய்தால் அவர் எழுந்து வந்துவிடுவார் எனவும் கூறி சண்டை போட்டுள்ளனர்.
போலீசார் எவ்வளவோ முயற்சி செய்தும் முடியாதநிலையியல், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் உங்கள் தாயாரின் உயிரை காப்பாற்றிவிடலாம் எனக் கூறவே மகள்கள் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். ஒருவழியாக சடலத்தை ஆம்புலன்ஸில் ஏற்றி போலீசார் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
அங்கு மேரியை சோதனை செய்த மருத்துவர்கள், அவர் இறந்து 7 நாட்கள் ஆகிவிட்டதாகவும், அவரது உடலின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகள் அழுகிவிட்டதாகவும் கூறியுள்ளனர். இதனை கேட்டு அவரது மகள்கள் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.
இறுதியில் மேரியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பட்டுள்ளது. அவர் எப்படி இறந்தார்? என்ன ஆனது என்பது குறித்து போலீசார் அவரது மகள்களிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.