மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த 25 வயது இளைஞர்... நேரில் பார்த்த 60 வயது முதியவருக்கு நிகழ்ந்த சோகம்!!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருவெண்காடு அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் அருள்செல்வன்(25). அதே பகுதியை சேர்ந்தவர் முதியவர் சீனிவாசன். அருள்செல்வன் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் கள்ளத் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வருவதை சீனிவாசன் நேரில் பார்த்துள்ளார்.
அதனை முதியவர் சீனிவாசன் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அருள்செல்வன் முதியவரின் தலை மற்றும் முகம் உள்ளிட்ட பகுதியில் சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடியுள்ளார். இரத்த வெள்ளத்தில் கிடந்த முதியவர் சீனிவாசனை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சீனிவாசன் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அருள்செல்வனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மதுரை அருகே பயங்கரம்... துள்ளத் துடிக்க கொலை செய்யப்பட்ட இரட்டையர்கள்.!!
இதையும் படிங்க: அதிர்ச்சி... கள்ளக்காதலியுடன் உல்லாசம்.!! நேரில் பார்த்த முதியவருக்கு அரிவாள் வெட்டு.!!