மக்களே உஷார்!! தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெளுத்து வாங்கபோகும் கனமழை... எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா.?



3 days continuously rain in same places of tamilnadu

மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு வட தமிழகம்‌, தேனி, திண்டுக்கல்‌, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. 

நீலகிரி மற்றும்‌ கோயம்புத்தூர்‌ (மலைப்பகுதிகள்‌) மாவட்டங்களில்‌ ஒரு சில இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, தேனி, திண்டுக்கல்‌ மற்றும்‌ தென்காசி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது.

rain

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஒரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌ என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.