ஏரியில் குளிக்க சென்ற 4 மாணவிகள்..! கண்ணிமைக்கும் நொடியில் நடந்த துயரம்.! கதறி துடிக்கும் பெற்றோர்.



3-school-girls-died-in-lake-while-taking-bath-near-tiru

ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், ஏரிக்கு குளிக்க சென்ற மூன்று இளம் பெண்கள் நீரில் மூழ்கி உயிர் இழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் அடுத்த கூடப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி குமாரி. இவர்களுக்கு ஐஸ்வர்யா என்ற மகள் உள்ளார். இந்நிலையில், கொரோனா காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், சென்னை தாம்பரத்தை சேர்ந்த முருகன் என்பவரது மகள் தர்ஷினி தனது உறவினரான ஐஸ்வர்யா வீட்டிற்கு வந்துள்ளார்.

corono

வீட்டில் சும்மா இருப்பது போர் அடிப்பதாக நினைத்து ஐஸ்வர்யா, தர்ஷினி இருவரும் அருகில் இருக்கும் ஏரிக்கு குளிக்க செல்ல திட்டமிட்டுள்ளனர். இதனை அடுத்து தங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும், சந்தியா மற்றும்  சவுமியாஆகிய இருவரையும் தங்களுடன் குளிக்க வருமாறு ஏரிக்கு அழைத்து சென்றுள்ளன்னர்.

இந்நிலையில், தோழிகள் 4 பேர் மற்றும் ஐஸ்வர்யாவின் தாய் குமாரி ஆகிய 5 பேரும் ஏரிக்கு குளிக்க சென்றுள்ளனர். நீச்சல் தெரியாத தோழிகள் நால்வரும் திடீரென ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்று, நீரில் மூழ்கியுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குமாரி அவர்களை காப்பாற்ற போராடியுள்ளார். பின்னர் அவரின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் மாணவிகளை மீட்டக போராடியுள்ளனர்.

corono

இதில், ஐஸ்வர்யா மற்றும் அவரது தாய் குமாரியை மட்டுமே அவர்களால் காப்பாற்ற முடிந்தது. தர்ஷினி, சந்தியா, சவுமியா மூவரும் நீரில் மூழ்கி உயிர் இழந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவிகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்துபோன தங்கள் மகள்களின் உடல்களை பார்த்து அவர்களது பெற்றோர் கதறி அழுத காட்சி அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.