குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
டெங்கு காய்ச்சல் எதிரொலி.. 3 வயது சிறுமி பலியான சம்பவம்..!
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறு பகுதியில் வசித்து வருபவர்கள் சிவக்குமார் - ஜெயஸ்ரீ தம்பதியினர். இவர்களுக்கு மூன்றரை வயதில் சிவதர்ஷினி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் சிவதர்ஷினிக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.
இதனையடுத்து சிவதர்ஷணியை பெற்றோர் சிகிச்சைக்காக பரமத்தி வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்து நிலையில் சிறுமிக்கு இரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைந்ததால் அவரை உடனடியாக மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதனையடுத்து அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதை உறுதி செய்தனர். இதனைத்தொடர்ந்து சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி சிவதர்ஷினி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் டெங்கு காய்ச்சலால் சிறுமி பரிதாபமாக பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.