குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
34 வயசு ஆயிடுச்சு!! எங்கு தேடியும் கிடைக்கல!! விரக்தியின் உச்சத்திற்கே சென்ற இளைஞர் விஷம் குடித்து தற்கொலை..
திருமணத்திற்கு பெண் கிடைக்காத விரக்தியில் இளைஞர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்குடி வைரவபுரம் நேரு நகரை சேர்ந்தவர் ஆதப்பன்(34). ஓட்டுநராக வேலை பார்த்துவந்துள்ளார். இவரது தாய் தந்தை இருவரும் இறந்துவிட்டநிலையில், ஆதப்பன் தனது சகோதரர் வீட்டில் வசித்துவந்துள்ளார். இந்நிலையில் 34 வயதாகும் ஆத்தப்பனுக்கு திருமணம் செய்துவைக்க அவரது உறவினர்கள் முயற்சித்துள்ளனர்.
ஆனால் பல இடங்களில் பேசியும் அவருக்கு எந்த வரணும் அமையவில்லை. இதனால் ஆதப்பன் சமீப காலமாக மனஉளைச்சலில் இருந்துவந்துள்ளார். மேலும் அவருக்கு குடிப்பழக்கமும் இருந்துவந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று ஆதப்பன் விஷம் குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கிடந்துள்ளார்.
உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஆதப்பன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
திருமணம் ஆகாத விரக்தியில் இளைஞர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.